பத்திரிகையாளரை கொலை செய்யுமாறு சவுதி இளவரசர் உத்தரவிட்டார்- சிஐஏ

பத்திரிகையாளர் ஜமால்கசோஜியை படுகொலை செய்யுமாறு சவுதிஅரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முகமட் பில் சல்மானே உத்தரவிட்டார் என்ற முடிவிற்கு அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான சிஐஏ வந்துள்ளதாக வோசிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

இளவரசரின் சகோதரர்  காலிட் பின் சல்மான்,அமெரிக்காவிற்கான சவுதி அரேபிய தூதுவர் உட்பட பலர் கொல்லப்பட்ட பத்திரிகையாளருடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடல்கள் உட்பட பல புலனாய்வு தகவல்களை அடிப்படையாகவைத்தே சிஐஏ இந்த முடிவிற்கு வந்துள்ளது.

முகமட் பின் சல்மானின் சகோதாரர் காலிட் பின் சல்மான் துருக்கியிலுள்ள சவுதி அரேபிய தூதரகத்திற்கு சென்று குறிப்பிட்ட ஆவணங்களை பெறுமாறு தொலைபேசியில் தெரிவித்தார் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் வழங்கினார் எனவும் வோசிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.

கசோஜி கொல்லப்படுவாரா என்பது காலிட்டிற்கு தெரிந்திருந்ததா என்பது தெரியாது ஆனால்  தனது சகோதரரின் உத்தரவின் பேரில் அவர்  பத்திரிகையாளருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டார் என வோசிங்டன் போஸ்ட் குறிப்பிட்டுள்ளது.

சிஐஏயின் மதிப்பீடுகளை அமெரிக்க அதிகாரிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர் என வோசிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.