இன்றைய ராசிபலன் (17/11/2018)

  • மேஷம்

    மேஷம்: தன்னம்பிக் கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். சிறப்பான நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: உங்கள் செயலில் வேகம் கூடும். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். நட்புவழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப் பார்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். உற்சாகமான நாள்.

  • கடகம்

    கடகம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். பொறுமைத் தேவைப்படும் நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். மனைவி வழியில் உறுதுணையாக இருப்பார்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோ கத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக் கைகள் நிறைவேறும். திறமைகள் வெளிப் படும் நாள்.

  • கன்னி

    கன்னி: பணப்புழக்கம் அதிகரிக்கும். சொந்த-பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றைவிட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அமோகமான நாள்.

  • துலாம்

    துலாம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: எதிர்ப்புகளை யும் தாண்டி முன்னேறுவீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியா பாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

  • தனுசு

    தனுசு: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வு களுக்கு மதிப்பளிப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். உறவினர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். நினைத்ததை முடிக்கும் நாள்

  • மகரம்

    மகரம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங் களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோ கத்தில் மேலதிகாரி மதிப்பார். மனநிறைவு கிட்டும் நாள்.

  • கும்பம்

    கும்பம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர்கள். நண்பர்கள், உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

  • மீனம்

    மீனம்: குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். உடல் நலம் பாதிக்கும்.வியாபாரத் தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோ கத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். போராடி வெல்லும் நாள்.