விராட் கோலியை முட்டாள் என கூறிய நடிகர் சித்தார்த்!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி, வெளிநாட்டு வீரர்களை விரும்பும் ரசிகர்கள் நாட்டை விட்டு வெளியேறும்படி கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு நடிகர் சித்தார்த் விராட் கோலிக்கு கண்டனம் தெரிவித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

ரசிகர் ஒருவர் இந்திய கிரிக்கெட் வீரர்களை விட வெளிநாட்டு வீரர்களின் பேட்டிங் தான் தனக்கு பிடிக்கும் என்று கூறியதற்கு பதிலளித்த விராட் கோலி, வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களை விரும்புபவர்கள் இந்தியாவில் வசிக்கத் தேவையில்லை என்று தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து நடிகர் சித்தார்த் கூறுகையில், நீங்கள் இனிமேலும் கிங் விராட் கோலி என்ற அடைமொழியை தக்க வைத்துக் கொள்ள விரும்பினீர்கள் என்றால், உங்களுக்கு நீங்கள் பாடம் கற்றுக்கொள்ளும் தருணம் வந்துவிட்டது என்று அர்த்தம்.

அமேலும், எதிர்காலத்தில் இது போன்ற சூழலில் டிராவிட்டாக இருந்தால் என்ன சொல்லியிருப்பார் என்பதை யோசித்துப் பேசுங்கள். இந்திய அணியின் கேப்டனிடமிருந்து இப்படி ஒரு முட்டாள்தனமான வார்த்தைகளா?’ என்று தெரிவித்துள்ளார்.