பேஸ்புக் பழக்கம்., மலர்ந்தது காதல்.! ஆசிரியைக்கு நேர்ந்த அவலம்..!!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சார்ந்தவர் இராஜப்ரவீன் (25). இவர் பட்டதாரியாக இருந்து வருகிறார். இவருக்கும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்கநல்லூரை சார்ந்த அரசு பள்ளி ஆசிரியருக்கும் முகநூல் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆசிரியை கணவரை பிரிந்து வாழ்பவர்.

இவர்கள் இருவரும் நட்பு வட்டாரத்தில் பழகி வந்துள்ளனர். அப்போது ராஜ்பரவீன் தொகுதி-2 தேர்வு எழுத உள்ளதாகவும்., அதற்கு பணம் தேவைப்படுகிறது என்றும் ஆசிரியையிடம் கூறியுள்ளார். இதனை கேட்ட அவர் நான் உனக்கு பணஉதவி செய்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

இதற்க்காக அவரை சந்திக்க ராஜ்பரவீன் கோயம்புத்தூருக்கு சென்று ரூ.38 ஆயிரத்தை பெற்றுள்ளார். பின்னர் இருவரும் ஓட்டலுக்கு சென்றுள்ளனர். அங்கு வைத்து அவருக்கு மயக்கமாத்திரை கலக்கப்பட்ட குளிர்பானத்தை வழங்கியுள்ளார்.

அதனை அருந்திய அவர் மயக்கமடையவே., பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச படமும் எடுத்துள்ளார். மேலும் எடுத்துவைத்த வீடியோ பதிவுகளை ஆதாரமாக காண்பித்து மேலும் 3 முறை உல்லாசம் அனுபவித்துள்ளார்.

பின்னர் ராஜ்பரவீனிடம் திருமணம் செய்யக்கூறி அவர் முறையிடவே., ரூ.2 இலட்சம் வழங்கும் பட்சத்தில் திருமணம் செய்துகொளவதாக தெரிவித்துள்ளார். அந்த ஆசிரியையும் சுமார் 10 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்க பணத்தை வாங்கிட்டு தலைமறைவாகிவிட்டார்.

இந்த சம்பவம் குறித்து சிங்கநல்லூரில் புகார் அளித்ததை அடுத்து ராஜ்பரவீனை கைது செய்த காவல் துறையினர்., அவன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.