கண்மூடித்தனமாக யாரையும் நம்பாதீர்கள்: கைதுக்கு பின்னர் பிரபல நடிகையின் வாக்குமூலம்

இந்திய மாநிலம் கேரளாவில் பல கோடி மதிப்பிலான அடுக்குமாடி குடியிருப்பு முறைகேடு வழக்கில் கைதான பிரபல நடிகை தன்யா மேரி வர்கீஸ் தமது அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

வாழ்க்கையில் திடீரென்று உருவான சம்பவங்களில் இருந்து பல அனுபவங்கள் கிடைத்தது எனவும் நடிகை வெளிப்படுத்தியுள்ளார்.

திருமணத்திற்கு பின்னர் கணவருடன் அவரது தொழில் தொடர்பாக உறுதுணையாக இருந்து வந்தவரை உலுக்கியது மோசடி வழக்கு.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த இச்சம்பவம் திரைப்பிரபலங்கள் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

ஒரே இரவில் எல்லாமே தலைகீழ் மாற்றம் ஏற்படும் என்பதை வாழ்க்கை புரியவைத்ததாக கூறும் தன்யா,

கண்மூடித்தனமாக அனைவரையும் நம்பும் கூட்டத்தில் இருந்தேன், ஆனால் தற்போது ஒவ்வொருவரையும் அறிந்து பழக கற்றுக்கொண்டேன் என்கிறார்.

சாதாரண குடும்பத்தில் பிறந்த தாம், பரம்பரையாக தொழில் செய்யும் குடும்பத்தில் திருமணம் செய்து கொண்டதால், கணவரை தொழில் ரீதியாக உதவ முயன்றேன்.

ஆனால் அதுவே வினையாக முடிந்தது. மொடலாக அறிமுகமான தன்யா, பின்னர் திரைப்படங்களில் பிரபலமானார்.

இந்த நிலையில் நடிகரும் தொழிலதிபருமான ஜாண் என்பவரை திருமணம் செய்துகொண்டு நடிப்பதை நிறுத்தினார்.

அதன்பின்னர் மோசடி குற்றச்சாட்டில் சிக்கி செய்திகளில் வலம்வந்தார். தற்போது நீண்ட நாட்களுக்கு பின்னர் மீண்டும் நடிக்க வந்துள்ளார்.