கணவனை பிரிந்து வாழ்ந்த ஆசிரியை!. மயக்கியும், மிரட்டியும் உல்லாசம் அனுபவித்த இளைஞன்!

மதுரை மாவட்டத்தில், ராஜபிரவீன் என்ற இளைஞருக்கு பேஸ்புக் மூலமாக அரசு பள்ளி ஆசிரியை ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் அந்த ஆசிரியையிடம் ராஜபிரவீன் முகநூல் மூலமாக நட்பாக பழகியுள்ளார்.

இதையடுத்து ராஜபிரவீன் கோவை மாவட்டத்திற்கு சென்று ஆசிரியையை நேரில் சந்தித்து பேசினார். அப்போது ராஜபிரவீனுக்கு ஆசிரியை ரூ.38 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் காசோலைகளை கொடுத்துள்ளார்.

அனைத்தையும் பெற்றுக்கொண்ட ராஜபிரவீன் ஆசிரியையை ஓட்டலுக்கு அழைத்து சென்று தண்ணீரில் மயக்க மாத்திரையை கலந்து கொடுத்துள்ளார்.

ஆசிரியை மயங்கியதை அடுத்து அறைக்கு அழைத்து சென்று உல்லாசம் அனுபவித்துள்ளார். மேலும், ஆசிரியையை ஆபாசமாக வீடியோவும் எடுத்துள்ளார். இந்த வீடியோவை காட்டி ஆசிரியையை மிரட்டியுள்ளார்.

இந்நிலையில் ராஜபிரவீன் ஆசிரியையை திருமணம் செய்ய வேண்டுமானால் ரூ.2 லட்சம் தர வேண்டும் என கேட்டுள்ளார். இதற்கு ஆசிரியை மறுத்துள்ளார். மேலும், ஆசிரியையிடம் இருந்து 10 பவுன் நகை, ரூ.10 ஆயிரத்தை வாங்கி சென்று தலைமறைவாகியுள்ளார் ராஜபிரவின்.

இதனையடுத்து ஆசிரியை காவல்நிலையத்தில் ராஜபிரவின் மீது புகார் செய்தார். அதன்பேரில் ராஜபிரவின் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.