அதிரடி வீயூகத்துடன் கமல்ஹாசனின் அடுத்த திட்டம்.!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரு தினங்களில் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

நாளை மதியம் 3.30 மணிக்கு நல்லம்பள்ளியிலும், 4.30 மணிக்கு பாப்பாரப்பட்டியிலும், 5.30 மணிக்கு பாலக்கோட்டிலும், 6.30 மணிக்கு காரிமங்கலத்திலும், இரவு 7 மணிக்கு பெரியாம்பட்டியிலும் நடக்கவிருக்கும் கூட்டங்களில் வேனில் நின்றபடி உரையாற்றுகிறார்.

இதை அடுத்து நாளை இரவு 8 மணிக்கு தர்மபுரி வள்ளலார் திடலில் நடக்கும் மக்கள் நீதி மய்யம் பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் உரையாற்றுகிறார்.

நாளை மறுநாள் (10-ந்தேதி) பிற்பகல் 3.30 மணிக்கு அரூர் ரவுண்டானாவிலும், மாலை 4.30 மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ரவுண்டானாவிலும், மாலை 5 மணிக்கு மத்தூரிலும், 6 மணிக்கு பர்கூரிலும், 6.30 மணிக்கு கிருஷ்ணகிரியிலும் உரையாற்றுகிறார். பின்னர் இரவு 8.30 மணிக்கு ஓசூரிலும் வேன் மூலம் மக்களை சந்தித்து உரையாற்றுகிறார்.