பெருந்தொகைப் பணத்துடன் மனுஷ நாணயக்கார கைது!

பெருந்தொகைப் பணத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார சிங்கப்பூரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மஹிந்த ராஜபக்ச ஆதரவு மலையக தேசிய முன்னணியின் தலைவர் ரிஷி செந்தில்ராஜ் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அரசாங்கத்திலிருந்து விலகி மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து கொள்வதற்காக வழங்கப்பட்டதாக கூறப்படும் பெருந்தொகையான பணத்துடனேயே மனுஷ நாணயக்கார இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், இதுதொடர்பிலான உத்தியோகப்பூர்வ அறிவித்தல்கள் எதனையும் பொலிஸ் தலைமையகம் இதுவரையில் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.