பழங்களுடன் கூடிய குளுகுளு தயிர் சேமியா!!

சேமியாவை நினைக்காத ஆட்களே இல்லை., சிறு பிள்ளைகள் பெரும்பாலும் விரும்பும் ஒரு உணவாக சேமியா இருந்து வருகிறது. நமது பெற்றோர்களிடம் கேட்டால் தெரியும் நாம் சிறுகுழந்தையாக இருக்கும் போது என்னென்ன உணவு வகைகளை விரும்பி சாப்பிட்டோம்.

நமது வாழ்வில் இந்த சேமியானது கண்டிப்பாக இடம்பெற்றிருக்கும். அந்த வகையில் தயிர் சேமியா செய்வது எப்படி என்று இந்த செய்தியில் காண்போம்…

தயிர் சேமியா செய்வதற்க்கு தேவையான பொருட்கள்:

சேமியா – 250 கிராம்.,

சுத்தமான தயிர் – 3 கிண்ணம்.,

கடுகு – தே.கரண்டியில் பாதியளவு.,

காய்ந்த மிளகாய் – 3 அல்லது நான்கு (காரத்திற்கேற்ப).,

கருவேப்பில்லை – தேவையான அளவு.,

முந்திரி – 10 அல்லது 15 எண்ணம்.,

உப்பு – தேவையான அளவு.,

காரட் அல்லது கேரட் – 2 எண்ணம் (சிறியது).,

பழவகைகள் – விருப்பத்திற்கேற்ப (மாதுளை., ஆப்பிள்., கொய்யாப்பழம்., மாம்பழம்., திராட்சை., இனிப்பு பிளம்ஸ் பழம்).

செய்முறை:

முதலில் எடுத்துக்கொண்ட மிளகாய் மற்றும் கேரட்டை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்., பழங்கள் எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் அதனையும் சிறுசிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

சேமியாவை பாதியளவு வேகவைத்த தன்மையுடன் இருக்கும் படி., நீரில் கொதிக்கவைத்து எடுக்கவும். சேமியாவில் உள்ள நீரை முழுவதுமாக வடிகட்டவும்.

வானெலியில் எண்ணெய் ஊற்றி., எண்ணெய் சூடேறியவுடன் கடுகு., முந்திரி., மிளகாய் மற்றும் கருவேப்பிலையை ஒன்றை பின் ஒன்றாக போட்டு அனைத்தையும் பொன்னிறமாக மாறும் படி வறுத்தெடுக்கவும்.

பின்னர் அந்த வானெலியில் தயிரை ஊற்றி அதில் நறுக்கி வைத்த கேரட் மற்றும் பழவகைகளை போடவும் மற்றும் தேவையான அளவிற்கு உப்பை போட்டுக்கொள்ளவும்.

ஒரு மணித்துளிகள் (நிமிடம்) வரை நன்றாக கலக்கிவிட்டு வேகவைத்த சேமியாவை போட்டு நன்றாக கிளறவும். அடுப்பில் இருந்து வரும் நெருப்பானது குறைவாக (SLIM) ல் இருப்பது முக்கியம்.

நெருப்பை அதிகமாக வைத்தால் தயிர் கட்டியாவதற்கு வாய்ப்பு உள்ளது.

இப்போது சுவையான தயிர் சேமியா தயார். இதனை குளிர்சாதனப்பெட்டியில் (பிரிஜ்) வைத்து குளுகுளுவென்றும் சாப்பிடலாம்.