ஆரம்பமானது அதிகார மோதல்!

நாடாளுமன்றம் கலைக்கப்படாதென பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை ஆளும் கட்சிக்கு உள்ளதாக மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்படாது என மஹிந்த கூறியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பிர்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமையை தீர்க்க நாடாளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் அதனை மறுக்கும், பிரதமர் நாடாளுமன்றம் கலைக்கப்பட மாட்டாது என இன்று அறிவித்துள்ளார்.