நியூசிலாந்து வீரர்கள் நிகழ்த்திய புதிய சாதனை!

நியூசிலாந்தில் உள்ளூர் அணிகளுக்கான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் வடக்கு மாவட்ட அணியும், தெற்கு மாவட்ட அணியும் மோதின.

வடக்கு மாவட்ட அணிக்காக விளையாடிய ஜோ கார்டர், பிரிப்ட் ஹம்டன் என்ற இரு வீரர்களும் தெற்கு மாவட்ட அணிகள் வீசிய 46வது ஓவர்களில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

தெற்கு மாவட்ட அணியின் பவுலர் ஒருவர் வீசிய 46 வது ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு அனுப்பினார் ஹம்டன். பின்னர் அவர் இரண்டாவது பந்தினை சிக்ஸராக அடித்தார். ஆனால் அந்த பந்தை அம்பயர் நோ பந்து என அறிவித்தார். அடுத்து வந்த பந்தையும் சிக்ஸராக அடித்தார். அந்த பந்தும் நோ பந்தாக போனதால், பின்னர் வீசிய அடுத்த பந்திலும் சிக்ஸராக விளாசினார். பின்னர் அவர் 5 வது பந்தை அடித்து ஒரு ரன் ஓடினார். அதன் பிறகு இருந்த 3 பந்தையும் சிக்ஸராக அடித்தார் ஜோ கார்டர்.

இந்த 46 வது வீசப்பட்ட 8 பந்தில் 2 நோ பந்துகளில் மொத்தம் 43 ரன்கள் எடுக்கப்பட்டது. 50 ஓவர் முடிவில் அந்த அணி மொத்தம் 7 விக்கெட் இழப்பிற்கு 313 ரன்கள் எடுத்து. இதில் ஹம்டன் 95 ரன்களும், கார்டர் 102 ரன்களும் எடுத்தனர்.

பின்னர் ஆடிய தெற்கு மாவட்ட அணி 50 ஓவர்களில் 288 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.

இதற்கு முன்னர் முதல் தரப்போட்டியில் ரவிசாஸ்திரி, கேரி சோபர்ஸ் உள்ளிட்டோர் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்ததும், சர்வதேச ஒருநாள் போட்டியில் யுவராஜ் சிங் , கிப்ஸ் ஆகியோர் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்ததும் சாதனையாக இருந்தது. 2013ம் ஆண்டு வங்கதேசத்தில் நடைபெற்ற முதல் தரப்போட்டியில் ஒரே ஓவரில் 39 ரன்கள் அடித்தது சாதனையாக இருந்தது. தற்போது உள்ளுர் போட்டியில் ஒரு ஓவரில் 43 ரன்கள் என்பது புதிய சாதனையாக உள்ளது.