உலகம் முழுவதும் இணையத்தளத்தை புரட்டிப்போட்ட வீடியோ!

சமீப நாட்களாகவே தாய் கரடியுடன் சேர்ந்து குட்டி கரடி ஒன்று மலையேற நீண்ட நேரமாக முயற்சிக்கும் வீடியோ காட்சி இணையத்தளம் முழுவதும் வைரலாகி வருகிறது.

ரஷ்ய மலைப்பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றினை ராயல் கனடிய புவியியல் சமூகம், தங்களுடைய சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டதை அடுத்து, 1 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களால் பகிரப்பட்டுள்ளது.

இந்த வீடியோவானது கடந்த ஜூன் 19ம் தேதியன்று எடுக்கப்பட்டது.

அந்த வீடியோவில், தாய் கரடி வேகமாக மலையின் உச்சியில் ஏறி நின்றுகொண்டு தன்னுடைய குழந்தைக்காக காத்துக்கொண்டிருக்கிறது.

அதன் பின்னே ஏறி வரும் குட்டி கரடி, பனி சறுக்கால் மீண்டும் மீண்டும் கீழே விழுகிறது. ஆனால் விடா முயற்சியால் தொடர்ந்து ஏறி இறுதியில் தன்னுடைய தாயிடம் செல்கிறது.

இந்த வீடியோவை பார்த்த இணையதளவாசிகள் பலரும் விடாமுயற்சி என்பதை அந்த குட்டிக் கரடியிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்து வருகின்றனர்.