இந்தியா விண்டீஸ் 2வது டி20 போட்டி: தொடரை வெல்லுமா இந்தியா?

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி, லக்னோவில் இன்று (நவம்பர் 6) நடைபெறுகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய வென்ற நிலையில் இன்று லக்னோவில் இரண்டாவது போட்டி தொடங்குகிறது. முதல்  போட்டியில் இந்திய அணிக்கு கடுமையான நெருக்கடி கொடுத்த வெஸ்ட் இண்டீஸ் அணி இன்றைய போட்டியிலும் வெற்றிக்காக கடுமையாக போராடும். வெஸ்ட் இண்டீஸை பொறுத்தவரை, அவர்களது மாஸ் பேட்டிங் லைன் அப் சொதப்பினாலும், பவுலிங்கில் மிரட்டினார்கள். இன்றைய போட்டியில், பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டால், ரோஹித் தலைமையிலான இந்திய அணிக்கு கடும் நெருக்கடி கொடுக்கலாம்.

இந்திய அணியைப் பொறுத்தவரை, பேட்டிங்கில் அவ்வப்போது சொதப்பினாலும்,  பந்துவீச்சில் அபாரமாக செயல்படுகிறது. ரிஷப் பண்ட் பொறுப்புணர்ந்து ஆட வேண்டியது அவசியம்.  இந்த டி20 போட்டி, லக்னோவில் உள்ள எகானா சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில்  இரவு 7 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஹாட்ஸ்டார்-ல் போட்டியை நேரலையாக காணலாம்.