இன்றைய ராசிபலன் (05/11/2018)

  • மேஷம்

    மேஷம்: எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுய ரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். மாறுபட்ட அணுகு முறையால் சாதிக்கும் நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமை யும்.பணப் பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

  • கடகம்

    கடகம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். சொத்துப் பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். நினைத்ததை முடிக்கும் நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: இங்கிதமாகப் பேசி எல்லோரையும் கவருவீர்கள். தோற்றப் பொலிவுக் கூடும். நம்பிக்கைக்குரியவர்கள் கைக் கொடுத்து உதவுவார்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் ஏற்பட்ட பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

  • கன்னி

    கன்னி: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.

  • துலாம்

    துலாம்: குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். சகோதர வகையில் மனத் தாங்கல் வரும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல்செய்வீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை கறாராகப் பேசி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் விட்டு் கொடுத்துப் போவது நல்லது. தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: நீண்ட நாள் ஆசை யில் ஒன்று நிறைவேறும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். சொந்த-பந்தங்கள் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் நாள்.

  • தனுசு

    தனுசு: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாகப் பேசத்தொடங்குவார்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

  • மகரம்

    மகரம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். உடல் நலம் சீராகும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். தைரியமான முடிவுகள் எடுக்கும் நாள்.

  • கும்பம்

    கும்பம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் சிக்கனமாக இருக்கவேண்டுமென்று நினைத் தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். நீங்கள் ஒன்று பேசப் போய் மற்றவர்கள் அதை வேறுவிதமாக புரிந்து கொள்வார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.

  • மீனம்

    மீனம்: எதையும் தன்னம்பிக்கையுடன் செய்யத்தொடங்குவீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். மனைவிவழியில் நல்லசெய்தி உண்டு. உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். திட்டங்கள் நிறைவேறும் நாள்.