காவலரை மிரட்டும் எம்பி: வைரலாகும் வீடியோ

நீலகிரி தொகுதி அதிமுக எம்.பி கோபாலகிருஷ்ணன், ரோந்துப் பணியில் இருந்த காவலர் ஒருவரை மிரட்டும் வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி தொகுதி குன்னூர், ஓட்டுப்பட்டறைப் பகுதியைச் சேர்ந்த அதிமுக எம்.பி-யான கோபாலகிருஷ்ணன், கடந்த சில நாள்களுக்கு முன்பு குன்னூர் பேருந்து நிலையம் அருகே காரில் சென்றுள்ளார். அப்போது, அங்கு ரோந்துப் பணியில் இருந்த காவலர் ஒருவர் எதேச்சையாக, கோபாலகிருஷ்ணனின் காரை நிறுத்தியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த கோபாலகிருஷ்ணன், நீங்க பேட்ரோலிங்கா கூப்பிடுங்க. டி.எஸ்.பியை . சரியா வேலைய பார்க்கணும். இல்லைனா தொலைச்சுருவேன். என மிரட்டு விட்டு காரில் ஏறிக் கிளம்பி செல்லும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

எம்.பி.கோபாலகிருஷ்ணன் மதுபோதையில் மிரட்டியதாக காவல் துறையில் கூறப்படுகிறது. இதுதொடர்பாக எம்.பி கோபாலகிருஷ்ணன் நம்மிடம் பேசும்போது , அப்படி ஒன்றும் இல்லை என திட்டவட்டமாக மறுத்துள்ளார். சமூகத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் தனிமனித ஒழுக்கம் என்பது அவசியம். கடமையை செய்த காவலரை மிரட்டும் தொனியில் பேசிய எம் பி மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், அச்சுறுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யாமல் காவல் துறை உயர் அதிகாரிகள் மெளனம் சாதிக்கின்றனர். அடித்தட்டு மக்களுக்காக தவறு செய்யாமல் போராடக் கூடியவர்களின் மீது பொய் வழக்கு போடும் காவல் துறை , தவறு செய்யும் அரசியல் வாதிகளை கண்டுகொளவதில்லை என குற்றம் சாட்டினர்.