இளம் குடும்பஸ்தரின் அடாவடி…. குடும்பப் பெண் பரிதாப மரணம்….

யாழ்.வடமராட்சி கிழக்கு குடத்தனை மாளிகைத்திடல் கிராமத்தில் கடந்த-29 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை சில வீடுகளுக்குள் திடீரென போதையில் உள்நுழைந்த இளம் குடும்பஸ்தர் அங்கு உறக்கத்திலிருந்தவர்கள் மீது நடாத்திய சரமாரி வாள்வெட்டுத் தாக்குதலில், 66 வயதான முதியவரொருவர் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு குடும்பப் பெண்கள் உட்பட மூவர் படுகாயமடைந்திருந்தனர்.

குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குடும்பப் பெண்ணொருவர் சிகிச்சை பலனளிக்காது உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெயஸ்ரீ நிர்மலாதேவி(வயது- 53) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். இவர் முன்னர் உயிரிழந்திருந்த பரஞ்சோதி ஜெயஸ்ரீயின்(வயது- 66) மனைவியாவார்.இதேவேளை, குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்திருந்த குடும்பஸ்தரின் மனைவியின் தந்தை, தாயார் ஆகியோர் தொடர்ந்தும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.