மனைவியின் மோசமான செயலால் உயிரை விட்ட கணவன்: இறுதியாக பேசிய ஆடியோ??

இந்தியாவில் மனைவிக்கு வேறு நபருடன் தொடர்பு இருந்ததாலும், மனைவியே செத்துவிடு என கூறியதாலும் கணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் பிரசாந்த். இவருக்கும் பவானி என்ற பெண்ணுக்கும் கடந்த 2014-ல் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் பெங்களூரில் சில காலம் பவானி பணிபுரிந்தார். அப்போது அவருக்கு பிரனய் என்ற நபருடன் தவறான பழக்கம் ஏற்பட்டது.

இதையறிந்த பிரசாந்த் மனைவியை கண்டித்துள்ளார். ஆனால் இதை கேட்காத பவானி கணவரை பார்த்து நீ செத்து விடு என கூறியுள்ளார்.

இதனால் மனமுடைந்த பிரசாந்த் கடந்த 30-ஆம் திகதி தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் பிரசாந்த் எழுதிய கடிதம் மற்றும் ஆடியோ உரையாடலை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

கடிதத்தில், நான் எவ்வளவு சொல்லியும் என் மனைவி பிரனயுடனான தொடர்பை விடவில்லை, என்னை அவர் ஏமாற்றியதோடு செத்துவிடு என கூறியதாக எழுதியுள்ளார்.

இருவருக்குமான ஆடியோ உரையாடலில், பிரனய் தொடர்பை விட்டு தன்னுடன் வந்துவிடு என மனைவியிடம் பிரசாந்த் கூறுகிறார். ஆனால் உங்களை பற்றி எனக்கு கவலைகிடையாது என பவானி கூறுகிறார்.

மைத்துனருடான பிரசாந்தின் இன்னொரு ஆடியோவில், மனைவியின் செயலை பார்த்து அவமானம் அடைவதை விட நான் இறந்து போவதே மேல், என் பேச்சை அவள் கேட்கவே இல்லை என கூறியுள்ளார்.

இதையெல்லாம் ஆதாரமாக வைத்து பொலிசார் பவானியை கைது செய்துள்ளனர், அவர் மீது கணவரை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.