மெரினா கடற்கரையில் நேர்ந்த விபரீதம், பரிதாபமாக பலியான கல்லூரி மாணவன்.!

மெரினா கடற்கரையில் அலையில் சிக்கி உயிருக்கு போராடிய , சிறுவனை மீட்க சென்ற கல்லூரி மாணவா் அலையில் சிக்கி உயிாிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சாலிகிராமம் பகுதியைச் சோ்ந்தவர் பாண்டியராஜன்.இவர் தனியாா் பாலிடெக்னிக் கல்லூாி ஒன்றில் முதலாம் ஆண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து வந்தாா்.

இந்நிலையில் பாண்டியராஜன் சனிக்கிழமை அன்று கல்லூரி விடுமுறை என்பதால் தனது நண்பா்களுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிக்க மெரினா கடற்கரை சென்றுள்ளார்.

அப்போது அங்கு கடலில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் கடல் அலையில் சிக்கிக் கொண்டு உயிருக்கு போராடியுள்ளார். இந்நிலையில் சிறுவனை காப்பாற்ற சென்ற பாண்டியராஜனும் கடல் அலையில் சிக்கினாா். பின்னர் அலையில் சிக்கிய இருவரையும் அருகில் இருந்த இளைஞா்கள் மீட்க முயன்றனா்.

அதில் சிறுவன் எத்தகைய பாதிப்பும் இன்றி மீட்கப்பட்டார். ஆனால் பாண்டியராஜன் காணாமல் மாயமானார்.

இந்நிலையில் பட்டினப்பாக்கம் கடற்கரையில் இளைஞா் ஒருவரின் உடல் உயிாிழந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. பின்னர் அங்கு விரைந்த காவல் துறையினா் உயிரிழந்தது கல்லூரி மாணவர் பாண்டியராஜன் தான் என்பதை உறுதி செய்தனர்.

இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.