மீ டூ விவகாரத்தில், சின்மயிக்கு பெருகும் ஆதரவு! வைரமுத்துக்கு சிக்கல் !

கடந்த சில வாரங்களாக இணையத்தில் வைரலாகி வருவது #MeToo என்ற ஹாஸ் டேக் தான். உலகம் முழுவதும் ட்ரெண்டிங் ஆகி வரும் இந்த ஹாஸ் டேக் பயன்படுத்தி பலர் இதுவரை தங்களுக்கு நடந்த பாலியல் தொந்தரவுகளை குறித்து பதிவிட்டு வருகின்றனர்.

இந்த ஹேஸ்டேக்கை பயன்படுத்தி, கவிஞர் வைரமுத்து தன்னிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக பிரபல பாடகி சின்மயி புகார் ட்விட்டரில் பதிவு செய்தார். இந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், என் மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுக்களும் முழுக்க முழுக்கப் பொய்யானவை என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பாடகி சின்மயிக்கு திரைபிரபலங்கள் உள்பட பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து சின்மயிக்கு மாதர் சங்கமும் ஆதரவு தருவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக மாநில துணை செயலாளர் மகாலட்சுமி தெரிவிக்கையில், மாதர் சங்கம் சார்பாக சினமயிக்கு முழு ஆதரவு தெரிவிக்கின்றோம் என்றார்.