பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம், மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்.!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே சென்றதால், இதுவரை இல்லாத அளவிற்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை சந்தித்தது.இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் கடந்த 4 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை சிறிது சிறிதாக குறைந்து வருகிறது.

இவ்வாறு 4வது நாளான நேற்று பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 26 பைசா குறைந்து ரூ.84.96க்கும் இதேபோன்று டீசல் விலை 18 பைசா குறைந்து ரூ.79.51க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், தொடர்ந்து 5வது நாளான இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நேற்றைய விலையைவிட குறைந்துள்ளது. இன்று பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 32 பைசா குறைந்து ரூ.84.64க்கும், டீசல் விலை 29 பைசா குறைந்து ரூ.79.22க்கு விற்கப்படுகிறது.

காலை 6 மணி முதல் இந்த விலை அமலானது . இதனால் வாகன ஓட்டிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .