தனது செல்ல பேரனின் ஆசையை நிறைவேற்ற ரஜினி செய்த செயல்!

தனது பேரனின் ஆசையை நிறைவேற்றுவதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சொகுசு காரை விட்டுவவிட்டு பேரனுடன் ஆட்டோவில் பயணம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘பேட்ட’ படத்தில் நடித்து வந்த நடிகர் ரஜினிகாந்த்,நேற்று படப்பிடிப்பு முடிந்து, சென்னை திரும்பினார்.

இந்நிலையில் அவர் தனது இருந்தாவது மகள் சௌந்தர்யாவின் மகன் வேத்துடன் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனுஷ் வீட்டிற்கு செல்ல தயாராகி கொண்டிருந்தார்.

அப்போது வேத் ரஜினிகாந்துடன் ஆட்டோவில் பயணம் செய்ய வேண்டும் ஆசையாக உள்ளது என கூறியுள்ளான்.
இந்நிலையில் தனது செல்ல பேரனின் ஆசையை நிறைவேற்ற போயஸ்தோட்டம் அருகே உள்ள ஸ்டாண்டில் இருந்த ஆட்டோவை வரவழைத்து, தனது பேரன் மற்றும் மகளுடன் தனுஷ் வீட்டுக்கு ஆட்டோவில் சென்றுள்ளார்.அங்கு சிறிது நேரம் இருந்த ரஜினி காரில் புறப்பட்டு மீண்டும் போயஸ் தோட்டத்துக்கே சென்றுவிட்டார்.

இவர் ஆட்டோவில் செல்வதால் ரசிகர்களின் கூட்டம் அதிகமாகிவிடும் என தெரிந்தும், தனது பேரனின் ஆசைக்காக எளிமையாக ஆட்டோவில் சென்றது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது