ஆன்மிக வாழ்க்கையை மேற்கொள்ள தயாராகும் தொழிலதிபரின் மகள்கள்.!

திருவண்ணாமலையை சார்ந்த தொழிலதிபர்கள் கவுதம்குமார் மற்றும் அரவிந்த்குமார். சகோதரர்களாகிய இவர்கள் இருவரும் ஜெயின் மதத்தை சார்ந்தவர்கள். இதில் கவுதம்குமாருக்கு 2 மகளும்., ஒரு மகனும் உள்ளனர். அரவிந்த்குமாருக்கு இரண்டு மகளும் ஒரு மகனும் உள்ளனர்.

கவுதமின் இரண்டாவது மகளான பிரெக்ஷா., அரவிந்தின் இரண்டாவது மகளான சுவேதாவும் துறவு வாழ்க்கையை தொடங்க உள்ளனர். அந்த வகையில் இவர்களின் தந்தை நிருபருக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது.,

இவர்கள் இருவரும் பள்ளியில் இருந்து கல்லூரிவரை ஒன்றாக படித்தவர்கள்., இவர்கள் இருவரும் நல்ல திறமைசாலிகள். இவர்கள் இருவரும் படிக்கும் காலத்திலேயே துறவு புகப்போவதாக தெரிவித்தனர். இந்த விசயத்தை முதலில் நாங்கள் யாரும் பெரிதாக எண்ணிக்கொள்ள வில்லை. அனால் இவர்கள் இருவரும் இந்த விசயத்தில் மிகவும் உறுதியாக இருந்தனர்.

இவர்களின் மனதை மாற்றுவதற்கு இவர்களை அடித்தும்., அன்பாகவும் குடும்பத்துடன் கண்ணீருடனும் கூறி, அந்த வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகளை எடுத்துக்கூறியும் கதறிவிட்டோம். இவர்கள் எங்களின் வார்த்தைகளுக்கு செவிசாய்க்காமல் துறவு புகுவதிலேயே குறிக்கோளாக இருத்தனர்.

இதனால் எங்களின் மனதை மாற்றிக்கொண்டு இவர்களை ராஜஸ்தானில் உள்ள மதக்கல்லூரியில் சேர்த்து துறவறம் குறித்த படிப்புகளை மேற்கொள்ள சொல்லி தற்போது படிப்பு நிறைவடைந்த நிலையில் இவர்கள் இருவரும் துறவறம் புகுவதற்கு தகுதியானவர்கள் என்று மூத்த துறவிகள் கூறினார்.

இதனையடுத்து இவர்கள் இருவரும் வரும் நவம்பர் மாதத்தில் 11 ம் தேதியன்று குரு ஆசார்ய ஸ்ரீமகாஸ்ரமன் ஆசியோடு ஆன்மீக வாழ்க்கையை தொடங்க உள்ளதாக கூறினார்.