இயக்குனர் செய்த செயலால் ஆவேசமாகி பொங்கியெழுந்த சித்தார்த்.!

விரும்புகிறேன், கந்தசாமி ,திருட்டு பயலே போன்ற படங்களை இயக்கிய பிரபல இயக்குனரான சுசி கணேசன், தன் அப்பாவை மிரட்டியுள்ளதாகவும், இதற்கு எல்லாம் நான் பயப்படமாட்டேன் எனவும் நடிகர் சித்தார்த் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. இந்நிலையில் நடிகைகள் மற்றும் பெண்கள் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை தைரியமாக # metoo என்ற ஹாஸ்டேக் மூலம் வெளியிட்டு வருகின்றனர்.இதில் பல பிரபலங்களும் சிக்கி வருகின்றனர்.

இந்நிலையில் சென்ற வருடம் கவிஞர் லீனா மணிமேகலை தன்னுடைய ஃபேஸ்புக்கில் 2005-ம் ஆண்டு தனக்கு நடந்த கசப்பான அனுபவத்தை தெரிவித்திருந்தார். அதை #MeToo என்ற ஹேஷ்டேக்குடன் தற்போது பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், இயக்குநர் சுசி கணேசன் தன்னிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சி செய்ததாகவும் கத்தியைக்காட்டி தான் அவரிடமிருந்து தப்பித்ததாகவும் பதிவிட்டுள்ளார்..

ஆனால் இதற்கு சுசி கணேசன் மறுப்பு தெரிவித்திருந்தார். அதுமட்டுமின்றி லீனா மீது காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்போவதாகவும் கூறியிருந்தார்.

இதற்கிடையில் நடிகர் சித்தார்த், லீனாவுக்கு ஆதரவாக நிற்பதாக குறிப்பிட்டிருந்தார். இதை அறிந்த சுசி கணேசேன் உடனடியாக சித்தார்த்தின் வீட்டு எண்ணுக்கு போன் செய்து அவரது தந்தையை மிரட்டியதாக செய்திகள் வெளியாகியுள்ளது .


இந்த நிலையில் நடிகர் சித்தார்த் பரபரப்பு தகவலை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.”நான் லீனாவின் பக்கம் நின்றால் பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என இயக்குனர் சுசி கணேசன் என் வயது முதிர்ந்த தந்தையை தொலைபேசியில் மிரட்டியுள்ளார்.எனவே நான் இப்போது அனைவருக்கும் அழுத்தமாக ஒன்றை சொல்ல விரும்புகிறேன். நான் லீனா மணிமேகலைக்கு துணை நிற்கிறேன்.தைரியமுடன் போராடுங்கள் சகோதரி ” என பதிவிட்டுள்ளார்.

இது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.