மேல் நோக்கி பாயும் அருவி! வேகமாக பரவும் காணொளி…

அருவிகள் வழக்கமாக கீழ் நோக்கி பாய்வதை தான் பார்த்திப்போம். ஆனால் இங்கு மேல் நோக்கி பாய்ந்துள்ளது. இதற்கான காரணம் என்ன என்பது தெரியவேண்டுமா?

இங்கிலாந்தைத் தாக்கிய ஹெலன் புயல் காரணமாக அருவி ஒன்று மேல்நோக்கி பாய்ந்த வீடியோ பார்வையாளர்களை அதிர்ச்சிக்கும், ஆச்சரியத்துக்கும் உள்ளாக்கியது.

வட இங்கிலாந்து பகுதிகளை ஹெலன் என்று பெயரிடப்பட்ட புயல் தாக்கியது. யார்க்சையர் பகுதியில் உள்ள மாலர்ஸ்டேங் முனையில் (Mallerstang Edge) கம்ரியா (Cumbria) என்ற அருவி பாய்ந்தோடுகிறது. மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய காற்றின் வேகத்திற்கு அருவியால் ஈடுகொடுக்க முடியவில்லை.

புயல் காரணமாக புவியீர்ப்பு விசைக்கு எதிராக மேல்நோக்கி அருவி சீறிப் பாய்ததைக் கண்ட சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.