ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் எடுத்த அதிரடி தீர்மானம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் வெளியிட்ட கருத்து காரணமாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் விமானங்களின் ஊடாக பயணங்களை மேற்கொள்ளும் பயணிகளுக்கு இனி மரமுந்திரிகைகளை வழங்குவது இடைநிறுத்தப்பட்டுள்ளது.

தற்காலிக அடிப்படையில் பயணிகளுக்கு மரமுந்திரிகை வழங்குவதனை ஸ்ரீலங்கன் விமான சேவை நிர்வாகம் இடைநிறுத்தியுள்ளது.

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானங்களில் வழங்கப்படும் மரமுந்திரிகையை நாய் கூட சாப்பிடாது என அண்மையில் ஜனாதிபதி மைத்திரி கருத்து வெளியிட்டிருந்தார்.

தற்போது கையிருப்பில் உள்ள மரமுந்திரிகைகளை அகற்றவும், இதுவரையில் மரமுந்திரிகை விநியோகம் செய்த டுபாய் நிறுவனத்திடமிருந்து இனி மரமுந்திரிகை கொள்வனவு செய்வதில்லை எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.