பொலிஸாரினால் வீண் அசௌகரியத்திற்கு உள்ளாகின்றீர்களா? : அச்சமின்றி வீடியோ எடுத்து அனுப்புங்கள்

பொலிஸ் உத்தியோகத்தர்களில் ஒரு சிலரின் செயற்பாடுகளால் பொது மக்கள் அசௌகரியங்களை எதிர்கொள்ளும் சம்பவங்கள் தொடர்பாக நாளாந்தம் நாங்கள் கேள்விபடுகின்றோம். குறிப்பாக பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களினூடாக நாங்கள் அவை தொடர்பான காட்சிகளை பார்வையிடுகின்றோம்.

இவற்றில் அதிகமாக போக்குவரத்து பொலிஸாரின் செயற்பாடுகள் தொடர்பான வீடியோ காட்சிகளையே அதிகமாக பார்க்கின்றோம்.

இவ்வாறான சம்பவங்களின் போது பொலிஸாரை வீடியோ எடுப்பதற்கு சிலருக்கு பயம் ஏற்பட்டிருந்தாலும் தாம் அவர்களின் செயற்பாடுகளினால் பாதிக்கப்படுகின்றோம் என்றால் அதனை வீடியோ எடுக்க முடியுமென வாகன போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்பு விடயத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதன்படி அந்த வீடியோ காட்சியை dig.traffic@police.lk என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்க முடியுமென அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை அந்த வீடியொவை தம்வசம் வைத்திருப்பது மிகவும் பிரயோசமாக அமையுமெனவும் தெரிவித்துள்ளார்.

வானொலி நிகழ்ச்சியொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.