திருமண நாளன்று கணவர் அதை செய்யாததால்… மனைவி தற்கொலை..!

ஆவடி, பாரதியார் தெருவை சேர்ந்தவர் தேவானந்தன். இவருக்கு ஆனந்தி என்கிற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடம் மாற்றும் ஆகிறது. கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

கடந்த 10-ந்தேதி அவர்களுக்கு முதலாம் ஆண்டு திருமண நாள் வந்துள்ளது. அன்று கோவிலுக்கு அழைத்து செல்லுமாறு ஆனந்தி, கணவரை வற்புறுத்தினார். ஆனால் அவர் கோவிலுக்கு அழைத்து செல்லவில்லை.

கணவர், ஆனந்திக்கு திருமண நாள் வாழ்த்து சொல்லாததாலும் ஆனந்தி மிகவும் வருத்தத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில் தேவானந்தனும், அவரது தந்தையும் வேலூரில் நடந்த திருமணத்துக்கு சென்றுள்ளனர்.

வீட்டில் ஆனந்தியும், அவரது மாமியாரும் இருந்துள்ளனர். கணவரின் செயலால் வருத்தத்தில் இருந்த ஆனந்தி நேற்று இரவு வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து திருமுல்லைவாயில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது வீட்டில் ஆனந்தி எழுதி வைத்திருந்த 7 பக்க கடித்தத்தை காவல் துறையினர் கைப்பற்றினர்.

அதில் கணவர் தேவானந்தன், மாமனார், மாமியார் கொடுமை படுத்தியவதாக குற்றம்சாட்டி உள்ளார். மேலும் தன்னை கணவர் வெளியில் எங்கும் அழைத்து செல்லவில்லை என்று கூறியுள்ளார்.