கேலிகட் ஃபிஷ் பிரியாணி,

தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி – 250 கிராம்
எலுமிச்சைப்பழம் – 1
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
இஞ்சி-பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
வெங்காயம் – 3 (ஸ்லைஸ்களாக நறுக்கவும்)
தக்காளி – 1 (பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் – 10 (பொடியாக நறுக்கவும்)
தேங்காய் எண்ணெய் – 50 மில்லி
நெய் – 50 மில்லி
புதினா – அரை கைப்பிடி
கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி
கரம் மசாலாத்தூள் – 1 டீஸ்பூன்
பட்டை, கிராம்பு, ஏலக்காய் – தலா 3
உப்பு – தேவையான அளவு

மீனை ஊற வைக்க:

வஞ்சிரம் மீன் – 250 கிராம்
இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்,
எலுமிச்சை- 1

செய்முறை:

மீனைக் கழுவி சுத்தம் செய்து ஊற வைக்க வேண்டிய பொருட்களைச் சேர்த்து பிசிறி இருபது நிமிடம் ஊற விடவும்.

அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டுப் பொரிந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு பொன்னிறமாக வதக்கவும். இதில் இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், எலுமிச்சைச்சாறு, தக்காளி, புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கவும். இதில் அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். இத்துடன் பாஸ்மதி அரிசி, உப்பு சேர்த்து முக்கால் பதம் வேக விடவும். தண்ணீர் வற்றியதும் அடுப்பில் இருந்து பாத்திரத்தை இறக்கி தோசைக்கல்லை அடுப்பில் வைத்து அதன் மேல் இந்தப் பாத்திரத்தை வைக்கவும். மசாலாவில் ஊறிய மீனை பிரியாணியின் மேலே வைத்து மூடி போட்டு அதன் மேல் கனமான பொருளை வைக்கவும்.

இருபது நிமிடம் கழித்து மூடியைத் திறந்து நெய் ஊற்றி கிளறிப் பரிமாறவும்.