தாயை பிரியும் மும்தாஜின் அழுகை…

மஹத்தை வெளியேற்றிய பின்பு பிக்பாஸ் வீடே ஒரு புதிய மாற்றத்தை கொண்டிருக்கிறது என்று கூறலாம். மஹத்தின் பிரிவை தாங்க முடியாமல் ஐஸ்வர்யா, யாஷிகா தனிமையிலேயே இருந்து வருகின்றனர்.

நேற்றைய தினத்தில் நடந்த எவிக்ஷனில் டாஸ்க் சரியாக செய்யாத ஜனனி, பாலாஜி, டேனியல் இவர்கள் இந்த வாரத்திற்கு நாமினேஷனில் உள்ளனர்.

இந்நிலையில் இன்று மும்தாஜை பார்ப்பதற்கு அவரது குடும்ப நபர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர். அவர்களின் பாசம், அழுகை பார்வையாளர்களை கண்கலங்க வைத்துள்ளது.

இரண்டாவது ப்ரொமோவில் பாலாஜி மகள் போஷிகா பரிசு ஒன்றினையும், மனைவி நித்யா தோழியாக மட்டுமே உங்களை வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளது பாலாஜியை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.