யாழில் வீதியில் சென்ற பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி!

யாழில் வீதியில் சென்றுகொண்டிருந்த இளம் பெண்ணை இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் இடித்துவிட்டு சென்றுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.,

இன்று இரவு 8.00 மணியளவில் யாழ் – பருத்தித்துறை வீதியில் பருத்தித்துறையை அண்மித்த பகுதியில் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய 26 வயது மதிக்கத்தக்க பெண்ணை அவ்வழியால் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் பெண்ணை இடித்து விட்டு நிறுத்தாமல் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தால் காயமடைந்த பெண்னை அவரது நண்பர்கள் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.