யாழ் மாநகர முதல்வர் பதவியில் திடீர் மாற்றம்….!!

யாழ்ப்பாணம் மாநகர சபையின் பதில் முதல்வராக, துணை முதல்வர் து. ஈசன் இன்று முதல் பொறுப்பேற்றுள்ளார்.

யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் தனிப்பட்ட விடயம் காரணமாக வெளிநாடு செல்லவுள்ளமையால், துணை முதல்வரான து.ஈசன் அவரது இடத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.இன்று முதல் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை அவர் பதில் முதல்வராக கடமையாற்றவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.