மாணவியுடன் உல்லாசம் அனுபவிக்க முற்பட்டு பொலிஸாரிடம் வசமாக மாட்டிக் கொண்ட இளைஞர்…..!

தம்புத்தேகமவிலிருந்து அநுராதபுரம் நகரில் அமைந்துள்ள பாடசாலைக்கு செல்லும் மாணவியுடன் ஒரு இளைஞர் அதிசொகுசு கார் ஒன்றில் நகரில் அமைந்துள்ள பூங்காவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளான்.

இதனடிப்படையில் பொலிஸாரின் அவசர அழைப்பிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், காரை பின் தொடர்ந்து சென்ற பொலிஸார் குறித்த இளைஞரை மடக்கி பிடித்து கைது செய்துள்ளதோடு மாணவியையும் மீட்டுள்ளனர்.

இருவரையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்ற பொலிஸார் மாணவியின் பெற்றோருக்கும் பாடசாலை அதிபருக்கும் தகவல் அனுப்பிவைக்கப்பட்டது.

குறித்த இளைஞர் மாணவியை அழைத்துச் சென்று பாடசாலை சீருடையை கழற்றி மாற்றி வேறு உடையை அணிவித்து அவருடன் உல்லாசம் அனுபவிக்க குறித்த இளைஞர் திட்டம் தீட்டியிருந்ததாக பொலிஸார் ஆரம்ப கட்ட விசாரணையின் பின்னர் தெரிவித்தனர்.

விசாரணைகளின் பின்னர் இரு தரப்பு பெற்றோர்களையும் வரவழைக்கப்பட்டு கடும் எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.