வீதியை விட்டு விலகிய மோட்டார் சைக்கிள் கோர விபத்து!!

யாழ்ப்பாணம் – வடமராட்சி மற்றும் தென்மராட்ச்சி பிரதேசத்திற்கு இடைப்பட்ட பகுதியில் இடையே இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் 22 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இளைஞர் செலுத்திய மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி பாதுகாப்புச் சுவர் ஒன்றில் மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளது.

உயிரிழந்த இளைஞனின் சடலம் மருதங்கேணி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.