வவுனியா வீதியில் மக்களுக்கு காத்திருக்கும் உயிராபத்து!

வவுனியா குட்செட் வீதியால் பயணிப்பவர்கள் மிகுந்த அச்சத்துடனையே பயணிக்க வேண்டிய சூழ்நிலை காணப்படுவதுடன் பொதுமக்களுக்கு எச்சரிக்கையாய் இருக்கும் படியும் அக்கிராம இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியா குட்செட் வீதியில் பாரிய இரண்டு வளைவுகளை கொண்ட வீதியின் அருகே உள்ள வீடுகளில் நிற்கும் உயர வளர்ந்த தென்னை மரங்கள் காணப்படுவதினால் அவ்வீதியில் பயணிப்பவர்கள் அச்சத்தின் மத்தியில் பயணிக்க வேண்டியுள்ளது.

மேலும் குறித்த தென்னை மரங்களில் தேங்காய்கள் மற்றும் பழுத்த தென்னை ஓலைகளும் காணப்படுவதால் பலத்த காற்று வீசும் இக்காலகட்டத்தில் பயணிப்பவர்கள் மீது குறித்த தேங்காய்கள் வீழ்வதற்கு சந்தர்ப்பங்கள் அதிகமாக உள்ளது.

குறித்த வீதியானது சிறுவர்கள், முதியவர்கள் என எந்நேரமும் மக்கள் போக்குவரத்து அதிகமாக நிறைந்த வீதியாகும் இதில் இவ்வாறு அசாதாரண சூழ்நிலை காணப்படுவதற்கு நகரசபை நடவடிக்கை எடுக்கும் என கிராம இளைஞர்கள் தெரிவிப்பதுடன் நகரபிதாவிடமும் இதுபற்றி தெரியப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதேவேளை கடந்த சில தினங்களிற்கு முன் கடுகண்ணாவ பகுதியில் தென்னை மட்டை பெண்ணொருவரின் மேல் வீழ்ந்து உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.