ரட்ணப்பிரியவை மீண்டும் அதே பதவிக்கு நியமியுங்கள்- விமல்

முல்லைத்தீவு  சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கட்டளை தளபதியாக பணியாற்றிய நிலையில் அங்கிருந்து இடமாற்றப்பட்டுள்ள ரட்ணப்பிரியவை பந்துவை மீண்டும் அதே பதவிக்கு நியமிக்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல்வீரவன்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விமல் வீரவன்ச இது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்

முல்லைத்தீவு மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளதை கருத்தில் கொண்டு ரட்ணப்பிரிய பந்துவை மீண்டும் முன்னைய பதவிக்கே நியமிக்கவேண்டும் என விமல் வீரவன்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சமீபத்தில் குறிப்பிட்ட அதிகாரிக்கு நிகழ்வின் போது  முல்லைத்தீவு மக்கள் உணர்வுபூர்வமான பிரியாவிடை அளித்ததை காண்பிக்கும் புகைப்படங்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.