நான்கு உணவு பொருட்கள் இறக்குமதிக்கு தடை!

கோழி இறைச்சி, முட்டை, டின் மீன் மற்றும் கருவாடு இறக்குமதி செய்யப்படுவது சிறிது காலத்தில் நிறுத்தப்படும் என மீன்பிடி, நீரியல்வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார விவகார அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் ஜனாதிபதியின் ஆலோசனையின் படி விரைவில் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படும்.

தேசிய உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகளை ஊக்குவிக்கும் நோக்கில் அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா குறிப்பிட்டுள்ளார்.