கோத்தா மட்டும் ஜனாதிபதியானால் இலங்கையை விட்டே ஓடி விடுவேன்: முன்னாள் அமைச்சர்

முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஸ ஜனாதிபதியானால், நான் இலங்கையை விட்டே ஓடிவிடுவேன் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

2020ஆம் அண்டு கோத்தபாயவை ஜனாதிபதியாக்குவது தொடர்பில் பரவலாக கருத்துக்கள் எழுந்துள்ளன. ஆனால் அப்படி ஒன்று நடந்தால் நான் நாட்டை விட்டே சென்று விடுவேன்.

மகிந்த ஆட்சிக்காலத்தில், வெள்ளை வான் கலாச்சாரத்தை உருவாக்கியவர் கோத்தபாய ராஜபக்ஸ தான்.

அந்த காலக்கட்டத்தில் மக்கள் வெள்ளை வான்களில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.

மகிந்தவின் ஆட்சிக்காலத்தில், பசிலும், கோத்தாவுமே நாட்டை ஆட்சி செய்தார்கள் என்றும் மேர்வின் குறிப்பிட்டுள்ளார்.