வெளிநாட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த இலங்கை யுவதி!

வவுனியா – பூவரசங்குளத்தை பூர்வீகமாக கொண்ட பெண் ஒருவர் பெல்ஜியம் நாட்டில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

பெல்ஜியம் நாட்டில் பெற்றோருடன் வசித்து உயர்கல்வி கற்று வந்த 23 வயதுடைய ஆறுமுகம் லக்‌ஷிகா எனும் யுவதியே இவ்வாறு பெல்ஜியத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த யுவதி கல்வியிலும், விளையாட்டிலும் சிறந்து விளங்கியவர் என்பதுடன் இவரது மரணத்தில் பலத்த சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, யுவதியின் மரணம் தொடர்பில் பல்வேறு கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.