பெல்ஜியத்தில் பயங்கரவாத தாக்குதல் – மூவர் பலி- (வீடியோ)

பெல்ஜியத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.

பெல்ஜியத்தின் கிழக்கு பகுதி நகரான லீச்சினில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது

கொல்லப்பட்ட இரு பொலிஸாரும் பெண்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிகாரிகள் இது பயங்கரவாத தாக்குதல் என தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிதாரி பாடசாலையொன்றில் பெண்ணொருவரை பணயக்கைதியாக பிடித்தார் எனவும் தெரிவித்துள்ள அதிகாரிகள் பின்னர் அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என குறிப்பிட்டுள்ளனர்.

பெல்ஜியத்தின் லீச்சின் நகரப்பகுதியில் உள்ள உணவு விடுதியொன்றில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறிப்பிட்ட நபர் பொலிஸாரை கத்தியுடன் பின்தொடர்ந்தார் பின்னர் துப்பாக்கியை எடுத்து தாக்குதலை மேற்கொண்டார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

பின்னர் பாடசாலையை நோக்கி சென்ற நபர் கார் ஓன்றினுள் இருந்த 22 வயது நபர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.

அதன் பின்னர் ஆயுதமேந்திய பொலிஸார் அவ்விடத்திற்கு வந்தவேளை அந்த நபர் அவர்களை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு விட்டு தப்பியோட முயன்றுள்ளார்.அதனை தொடர்ந்து அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்

குறிப்பிட்ட சம்பவம் காரணமாக மக்கள் தப்பியோடும் படங்கள் சமூகஊடகங்களில் வெளியாகியுள்ளன.

4CBA13CA00000578-5781939-image-a-29_1527603466778  பெல்ஜியத்தில் பயங்கரவாத தாக்குதல் - மூவர் பலி- (வீடியோ) 4CBA13CA00000578 5781939 image a 29 15276034667784CB9A07100000578-5781939-Victims_The_two_police_officers_were_stabbed_and_then_shot_dead_-a-82_1527597317268  பெல்ஜியத்தில் பயங்கரவாத தாக்குதல் - மூவர் பலி- (வீடியோ) 4CB9A07100000578 5781939 Victims The two police officers were stabbed and then shot dead  a 82 15275973172684CBA370200000578-5781939-image-a-51_1527610245171  பெல்ஜியத்தில் பயங்கரவாத தாக்குதல் - மூவர் பலி- (வீடியோ) 4CBA370200000578 5781939 image a 51 15276102451714CB9AD7200000578-5781939-image-a-2_1527598605032  பெல்ஜியத்தில் பயங்கரவாத தாக்குதல் - மூவர் பலி- (வீடியோ) 4CB9AD7200000578 5781939 image a 2 1527598605032