தமிழ் புலிகள் மற்றும் சிறிலங்கா படைகளுக்கு வழங்கிய உதவிகள் தொடர்பான ரகசிய ஆவணங்கள் அழித்த பிரித்தானியா !!: கறைகளை கழுவ முற்படுகிறதா ? – சுபத்திரா (சிறப்பு கட்டுரை)

இலங்­கையில் விடு­தலைப் புலிகள் உள்­ளிட்ட தமிழ் அமைப்­பு­களின் ஆயுதப் போராட்டம் முளை­விடத் தொடங்­கிய 1978 -1980 கால­கட்­டத்தில், புலிகள் மற்றும் இலங்­கையில் பிரித்­தா­னி­யாவின் எம்.ஐ 5 மற்றும் எஸ்.­ஏ.எஸ். அமைப்­புகள் பயிற்­சி­களை அளித்­தமை தொடர்­பான, 200 ஆவ­ணங்­களை பிரித்தா­னிய வெளி­வி­வ­காரப் பணி­யகம் அழித்து விட்ட தக­வலை லண்­டனில் இருந்து வெளி­யாகும் ‘தி கார்­டியன்’ கடந்த வாரம் அம்­பலப்படுத்தியிருக்கி­றது.

தேவை­யற்ற ஆவ­ணங்கள் என்று, கூறி, இலங்கை தொடர்­பான – முக்­கி­ய­மாக இந்த மூன்று ஆண்டு காலப்­ப­கு­தியில் தமிழ்ப் புலிகள் மற்றும் தமிழ்ப் புலி­களின் ஆயுதப் போராட்­டத்தை ஒடுக்­கு­வ­தற்கு, பிரித்­தா­னி­யாவின் சிறப்புப் படைப்­பி­ரி­வு­க­ளான எம்.ஐ 5 மற்றும் எஸ்­ஏஎஸ் அமைப்­புகள் இலங்கைப் படை­யி­ன­ருக்கு பயிற்­சிகள் மற்றும் ஆலோ­ச­னை­களை வழங்­கி­யமை தொடர்­பான ஆவ­ணங்­களே அழிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

அந்தக் கால­கட்­டத்தில், விடு­தலைப் புலிகள் மாத்­தி­ர­மன்றி, பல தமிழ் அமைப்­புகள் ஆயு­த­மேந்­திய போராட்­டங்­களை ஆரம்­பித்­தி­ருந்­தன. ஆனாலும், பொது­வாக, எல்லா அமைப்­பு­க­ளையும், வெளி­நாட்டு அர­சுகள், புல­னாய்வு அமைப்­புகள், தமிழ்ப் புலிகள் என்று அழைப்­ப­தையே வழக்­க­மாக கொண்டிருந்­தன.

பிரித்­தா­னிய வெளி­வி­வ­கார பணி­ய­கத்­தினால் அழிக்­கப்­பட்ட காலப்­ப­கு­திக்­கு­ரிய ஆவ­ணங்­களில், விடு­தலைப் புலிகள் குறித்து மாத்­தி­ர­மன்றி, ஏனைய தமிழ் அமைப்­புகள் தொடர்­பான தக­வல்­களும் இருந்­தன.

இந்தக் கால­கட்­டத்­துக்­கு­ரிய 158 ஆவ­ணங்கள் அழிக்­கப்­பட்­டன என்­பதை வெளி­வி­வ­காரப் பணி­யகம் உறுதி செய்­தி­ருக்­கி­றது.

1978ஆம் ஆண்­டுக்­கு­ரிய ஒரே ஒரு ஆவணம் மாத்­திரம் தப்பிப் பிழைத்­தி­ருக்­கி­றது. தேவை­யற்ற இர­க­சிய ஆவ­ணங்­களை அழித்து விட 2012ஆம் ஆண்டு பிரித்­தா­னிய வெளி­வி­வ­காரப் பணி­யகம் முடிவு செய்­தது.

அதற்­க­மைய, கென்யா உள்­ளிட்ட பல நாடு­களில் கிளர்ச்­சி­களை ஒடுக்­கு­வ­தற்கு பிரித்­தா­னியா அளித்த பங்­க­ளிப்­புகள் தொடர்­பான பெரு­ம­ளவு ஆவ­ணங்கள் அழிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

அந்த வகையில் தான், தமிழ்ப் புலிகள் மற்றும், அவர்­களை ஒடுக்­கு­வ­தற்­காக பிரித்­தா­னி­யாவின் புல­னாய்வுப் பிரி­வுகள் அளித்த உத­விகள் பற்­றிய ஆவ­ணங்­களும் அழிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

ஆனால் இது ஒரு வர­லாற்றுத் தடய அழிப்­பாக நோக்­கப்­ப­டு­வ­தாக, பிரித்­தா­னி­யாவில் உள்ள நிபு­ணர்கள் பலரும் கருத்து வெளி­யிட்­டுள்­ளனர்.

2048  தமிழ் புலிகள் மற்றும் சிறிலங்கா படைகளுக்கு வழங்கிய உதவிகள் தொடர்பான  ரகசிய ஆவணங்கள் அழித்த பிரித்தானியா !!: கறைகளை கழுவ முற்படுகிறதா ? - சுபத்திரா (சிறப்பு கட்டுரை) 2048

இலங்­கையில் தமிழ் அமைப்­பு­களின் ஆயு­த­மேந்­திய போராட்­டத்தை அமெ­ரிக்கா, பிரித்­தா­னியா, இந்­தியா உள்­ளிட்ட பல நாடுகள் உன்னிப்பாகக்கண்­கா­ணித்­தி­ருந்­தன.

இந்தப் போராட்டம் தொடர்­பான ஏரா­ள­மான தர­வு­க­ளையும், தக­வல்­க­ளையும் ஆவ­ணப்­ப­டுத்­தி­யி­ருந்­தன.

அவ்­வா­றான தர­வு­களை உள்­ள­டக்­கி­யி­ருந்த ஆவ­ணங்­களும் கூட பிரித்­தா­னிய வெளி­வி­வ­காரப் பணி­ய­கத்­தினால் அழிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

பிரித்­தா­னிய வெளி­வி­வ­காரப் பணி­யகம் திரட்­டிய தக­வல்கள் அனைத்தும் முழு­மை­யா­னவை, உண்­மை­யா­னவை என்று கூற­மு­டி­யாது. ஆனால், வர­லாற்றைப் பகுப்­பாய்வு செய்து கொள்­வ­தற்கு – அவை முக்­கிய ஆவ­ணங்­க­ளாக, தகவல் மூலங்­க­ளாக அமைந்­தி­ருக்கும்.

வெளி­நாட்டு உள்­நாட்டு புல­னாய்வு அமைப்­பு­களால் திரட்­டப்­பட்ட தக­வல்கள் எல்­லாமே சரி­யா­ன­வை­யாக இருக்கும் என்­றில்லை. அமெ­ரிக்கப் புல­னாய்வு அமைப்­பான சிஐ­ஏயின் இர­க­சிய ஆவ­ணங்­களில் இடம்­பெற்­றுள்ள பல தக­வல்­களே அதற்குச் சான்று.

சிஐ­ஏ­யினால் தொகுக்­கப்­பட்ட பல இர­க­சிய ஆவ­ணங்கள், 2012ஆம் ஆண்டு பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­பட்­டன. தகவல் மூலங்கள் மற்றும் மறைக்­கப்­பட வேண்­டிய குறிப்­பிட்ட சில இர­க­சி­யங்கள் மாத்­திரம் அழிக்­கப்­பட்ட நிலையில் அந்த ஆவ­ணங்கள் வெளி­யி­டப்­பட்­டன.

அவ்­வாறு வெளி­யி­டப்­பட்ட ஆவ­ணங்­களில், ஒன்று “சிறி­லங்கா: அதி­க­ரிக்கும் கிளர்ச்சி” ( Sri lanka : The Growing Insurgency) என்ற தலைப்­பி­லா­னது. இது 1986 செப்­ரெம்­பரில் தயா­ரிக்­கப்­பட்­டது.

இந்த ஆவ­ணத்தின் முதல் பக்­கத்தில், கிளர்ச்­சி­யா­ளர்கள் ஐரோப்­பா­விலும் மத்­திய கிழக்­கிலும், அமெ­ரிக்க நிலை­களைத் தாக்கக் கூடிய ஆற்­றலைக் கொண்­டி­ருப்­ப­தா­கவும், இலங்­கைக்கு இரா­ணுவ, பொரு­ளா­தார ரீதியில் உதவும் நாடு­களை இலக்கு வைக்கக் கூடும் என்றும் கூறப்­பட்­டி­ருக்­கி­றது.

இது முன்­னெச்­ச­ரிக்­கை­யான குறிப்­பாக இருந்­தாலும், அத்­த­கைய ஆற்­றலை தமிழ் அமைப்­புகள் கொண்­டி­ருந்­த­னவா அல்­லது, தமிழ் அமைப்­பு­களின் பலத்தை மிகைப்­ப­டுத்தி ஆவ­ணப்­ப­டுத்­து­வதில் சிஐஏ ஈடு­பட்­டதா என்ற கேள்­விக்கு இட­முண்டு.

அது­போன்று, சிஐ­ஏயின் இன்­னொரு இர­க­சிய ஆவணம், 1986 மார்ச்சில் தயா­ரிக்­கப்­பட்­டது. அதன் தலைப்பு இலங்­கையின் தமிழ் கிளர்ச்சி: மாக்­சிச தாக்கம் (Sri lanka’s Tamil Insurgency: The Impact of Marxism). இந்த ஆவணம், தமிழ் அமைப்­பு­களின் போராட்­டத்­துக்கும், மாக்­சிச சிந்­த­னைக்கும் முடிச்சுப் போடும் வகையில் அமைந்­தி­ருந்­தது.

இது­போன்ற பல இர­க­சிய ஆவ­ணங்­களைக் கூட- அமெ­ரிக்கப் புல­னாய்வு அமைப்பு தணிக்கை செய்து பகி­ரங்­கப்­ப­டுத்­தி­யி­ருந்த நிலையில், பிரித்­தா­னிய வெளி­வி­வ­காரப் பணி­யகம், குறிப்­பிட்ட காலத்­துக்­கு­ரிய ஆவ­ணங்­களை அழித்­தி­ருப்­பது சந்­தே­கங்­க­ளையும் எழுப்­பி­யி­ருக்­கி­றது.

JR-Jayewardene  தமிழ் புலிகள் மற்றும் சிறிலங்கா படைகளுக்கு வழங்கிய உதவிகள் தொடர்பான  ரகசிய ஆவணங்கள் அழித்த பிரித்தானியா !!: கறைகளை கழுவ முற்படுகிறதா ? - சுபத்திரா (சிறப்பு கட்டுரை) JR Jayewardeneஇலங்­கையில் தமிழ் அமைப்­புகள் ஆயுதம் ஏந்திப் போராடத் தொடங்­கி­யி­ருந்த போது, அப்­போது ஆட்­சியில் இருந்து ஜே.ஆர்.ஜெய­வர்த்­தன, அமெ­ரிக்கா, பிரித்­தா­னியா போன்ற நாடு­களின் உத­வியைத் தான் முதலில் நாடி­யி­ருந்தார்.

ஆரம்­பத்தில் பிரித்­தா­னி­யாவின் இர­க­சிய புல­னாய்வுச் சேவைகள் தான், இலங்கைப் படை­யி­ன­ருக்கு உத­வி­க­ளையும், பயிற்­சி­க­ளையும், ஆலோ­ச­னை­க­ளையும் வழங்­கி­யி­ருந்­தன.

பின்னர், பாகிஸ்­தானும் தனது சிறப்பு பயிற்சி நிபு­ணர்­களை அளித்­தி­ருந்­தது

பிரித்­தா­னிய பாது­காப்பு அமைச்சின் 1978ஆம் ஆண்டின் பிற்­ப­கு­தியில் தொகுக்­கப்­பட்ட ஆவ­ணத்தில், சுதந்­திரம் கேட்டுப் போராடும் தமிழ்ப் போரா­ளி­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களை எடுப்­ப­தற்­கான ஆலோ­ச­னை­களை வழங்­கு­வ­தற்கு, பாது­காப்பு நிபுணர் ஒரு­வரை இலங்­கைக்கு அனுப்­பு­மாறு, அப்­போது ஜனா­தி­ப­தி­யாக இருந்த ஜே,ஆர்.ஜெய­வர்த்­தன பிரித்­தா­னிய வெளி­வி­வ­கார பணி­ய­கத்­திடம், கேட்டுக் கொண்டார் என்று கூறப்­பட்­டுள்­ளது.

எனினும், இது தொடர்­பான விப­ரங்­களை உள்­ள­டக்­கிய Sri Lanka: Security Assessment 1978 என்ற வெளி­வி­வ­காரப் பணி­ய­கத்தின் ஆவணம் அழிக்­கப்­பட்டு விட்­ட­தாக கூறப்­ப­டு­கி­றது.

அத்­துடன், தப்பிப் பிழைத்­துள்ள பிரித்­தா­னிய பாது­காப்பு அமைச்சின் ஆவ­ணங்­களில், பிரித்­தா­னி­யாவின் புல­னாய்வு அமைப்­பான, எம்ஐ5 இன் பணிப்­பாளர், 1979இல் இரண்டு தட­வைகள் பாது­காப்பு ஆலோ­சனை வழங்­கு­வ­தற்­காக இலங்­கைக்கு சென்­றி­ருந்தார் என்று கூறப்­பட்­டுள்­ளது.

இது­பற்­றிய விப­ரங்­களை உள்­ள­டக்­கிய 1979ஆம் ஆண்டின், Sri Lanka: Defence Visits from UK என்ற ஆவணம் வெளி­வி­வ­காரப் பணி­ய­கத்­தினால் அழிக்­கப்­பட்டு விட்­டது.

அத்­துடன், 1980இல், இலங்­கையில் புதி­தாக உரு­வாக்­கப்­பட்ட இரா­ணுவ கொமாண்டோ பிரி­வுக்கு பயிற்சி அளிக்க எம்ஐ 5 ஐ சேர்ந்த உயர் அதி­காரி ஜக் மோர்­டனின் பரிந்­து­ரைக்­க­மைய, பிரித்­தா­னி­யாவின் எஸ்­ஏஎஸ் பிரிவின் அதி­கா­ரிகள் குழு­வான்று இலங்­கைக்கு சென்­றமை பற்­றிய தக­வல்­களும் பிரித்­தா­னிய பாது­காப்பு அமைச்சின் ஆவ­ணத்தில் கூறப்­பட்­டுள்­ளது.

ஆனால், இது­பற்­றிய விப­ரங்­களை உள்­ள­டக்­கிய, UK military assistance to Sri Lanka, 1980 என்ற ஆவ­ணத்தை வெளி­வி­வ­காரப் பணி­யகம் அழித்து விட்­டது.

இந்த எஸ்­ஏஎஸ் குழு, இலங்கை இரா­ணு­வத்தின் 60 கொமாண்­டோக்­க­ளுக்கு நான்கு மாதங்கள் பயிற்­சி­களை அளித்­தி­ருந்­தது.

இந்த விப­ரங்கள் அழிக்­கப்­பட்­டுள்­ளதன் மூலம், இலங்­கையில் நடந்த போரில் தமது பங்கு பற்­றிய ஆதா­ரங்­களை இல்­லாமல் செய்­வ­தற்கு பிரித்­தா­னிய வெளி­வி­வ­காரப் பணி­யகம் முற்­பட்­டுள்­ளதா என்ற கேள்­வியும் உள்­ளது.

ஏனென்றால், இலங்­கையில் நடந்த போரில் ஆரம்­பத்தில் இருந்து இறுதி வரையில் ஏரா­ள­மான போர்க்­குற்­றங்கள் நிகழ்த்­தப்­பட்­டி­ருந்­தன. எனினும் பிற்­கா­லத்தில் நடந்த மீறல்­களே பெரும்­பாலும் முக்­கி­யத்­து­வப்­ப­டுத்­தப்­பட்­டன. ஆரம்ப கால­கட்­டத்தில் நடந்த மீறல்கள் அவ்­வ­ள­வாக கண்டு கொள்­ளப்­ப­ட­வில்லை.

ஆனால், விரி­வான போர்க்­குற்ற விசா­ரணை ஒன்று -நம்­ப­மான பொறி­முறை ஒன்றின் ஊடாக முன்­னெ­டுக்­கப்­படும் சந்­தர்ப்­பத்தில், அடி முதல் நுனி வரை ஆரா­யப்­படும்.

2200  தமிழ் புலிகள் மற்றும் சிறிலங்கா படைகளுக்கு வழங்கிய உதவிகள் தொடர்பான  ரகசிய ஆவணங்கள் அழித்த பிரித்தானியா !!: கறைகளை கழுவ முற்படுகிறதா ? - சுபத்திரா (சிறப்பு கட்டுரை) 2200

அத்­த­கைய ஒரு சூழல் எழுந்தால், தமிழ் அமைப்­பு­களின் ஆயுதப் போராட்டம் முளை­விட்ட சூழல், அதனை அடக்­கு­வ­தற்­கான முயற்­சிகள், அதற்கு உதவிய தரப்­புகள் என்று பட்­டி­ய­லி­டப்­படும்.

அவ்­வா­றா­ன­தொரு பட்­டி­ய­லுக்குள் தாமும் சிக்கி விடக்­கூ­டாது என்று பிரித்­தா­னியா எண்­ணு­கி­றதா என்ற கேள்­வியும் உள்­ளது.

ஆனால் அவ்­வா­றா­ன­தொரு விசா­ரணை நடத்­தப்­பட்டு, விரி­வாக ஆவ­ணப்­ப­டுத்தும் பொறி­முறை உரு­வாக்­கப்­பட்டால், அதில் பிரித்­தா­னியா மாத்­தி­ர­மன்றி, இந்­தியா, அமெ­ரிக்கா, சீனா, பாகிஸ்தான், என்று பல நாடு­களின் இர­க­சி­யங்கள் பலவும் அம்­ப­லத்­துக்கு வரக் கூடும்.

பிரித்­தா­னிய வெளி­வி­வ­காரப் பணி­யகம், 1978 – 80 காலப்­ப­கு­திக்­கு­ரிய ஆவ­ணங்­க­ளையே அழித்­தி­ருப்­ப­தாக கூறி­யி­ருந்­தாலும், அதற்குப் பிற்­பட்ட காலத்­துக்­கு­ரிய ஆவ­ணங்­களும் கூட அழிக்­கப்­பட்­டி­ருக்க வாய்ப்­புகள் உள்­ளன.

ஏனென்றால், 1978-80 காலப்­ப­கு­தியில் பிரித்­தா­னிய இர­க­சிய பாது­காப்புச் சேவை அமைப்­புகள் நிபு­ணத்­துவ ஆலோ­ச­னை­களை மாத்­தி­ரமே வழங்­கி­யி­ருந்­தன.

2014ஆம் ஆண்டு வெளி­யா­கிய, பிரித்­தா­னிய வெளி­வி­வ­காரப் பணி­ய­கத்தின் ஆவணம் ஒன்றில், இந்­தி­யாவில் பொற்­கோவில் தாக்­குதல் சம்­ப­வத்தை அடுத்து, 1984 செப்­ரெம்­பரில், எஸ்ஏ.எஸ் அதி­கா­ரி­களை இலங்கைப் படை­யி­ன­ருக்கு பயிற்சி அளிப்­ப­தற்கு பிர­தமர் மாக்­கிரட் தட்சர் அர­சாங்கம் அனு­மதி அளித்­தது என்று கூறப்­பட்­டி­ருந்­தது.

images  தமிழ் புலிகள் மற்றும் சிறிலங்கா படைகளுக்கு வழங்கிய உதவிகள் தொடர்பான  ரகசிய ஆவணங்கள் அழித்த பிரித்தானியா !!: கறைகளை கழுவ முற்படுகிறதா ? - சுபத்திரா (சிறப்பு கட்டுரை) images2அது­மாத்­தி­ர­மன்றி, தமிழ்ப் போரா­ளி­க­ளுக்கு உத­வு­வதை நிறுத்­துங்கள் என்று அப்­போது இந்­தியப் பிர­த­ம­ராக இருந்த இந்­திரா காந்­தி­யிடம், தட்சர் கோரி­ய­தா­கவும் ஆவ­ணங்­களில் கூறப்­பட்­டுள்­ளது.

1980இற்கும், 87 இற்கும் இடைப்­பட்ட காலத்தில், பிரித்­தா­னிய பாது­காப்புச் சேவை அமைப்­புகள் இலங்கைப் படை­யி­ன­ருக்கு நிபு­ணத்­துவ உத­வி­களை வழங்­கு­வ­தற்கும் அப்பால், நேரடியாகவும் களமிறங்கியிருந்தன.

1984 -87 காலகட்டத்தில், பிரித்தானிய அரசின் அனுமதியுடன் கேஎம்எஸ் (கினி மினி) எனப்படும், முன்னாள் எஸ்ஏஎஸ் அதிகாரிகளை உள்ளடக்கிய பாதுகாப்பு சேவை நிறுவனத்தின் ஊடாக, பாதுகாப்பு அதிகாரிகளும், விமானிகளும், நேரடியாகவே போர் முனைச் செயற்பாடுகளில் ஈடுபட்டனர்.

1986ஆம் ஆண்டு வல்லைப் பாலத்தை குண்டு வைத்து தகர்த்து, வடமராட்சிக்கும் வலிகாமத்துக்கும் இடையிலான தொடர்பை துண்டிக்கும் நடவடிக்கையில் விமானிகளாகவும், கள வழிநடத்தல் அதிகாரிகளாகவும் பிரித்தானிய அதிகாரிகள் பங்கேற்றனர்.

ஒப்பரேசன் லிபரேசன் நடவடிக்கையின் போதும், விமானிகளாக மாத்திரமன்றி பலாலியில் இருந்து இராணுவத்தை வழிநடத்தும் அதிகாரிகளாகவும் பணியாற்றியிருந்தனர்.

ஆக, இலங்கைப் போரில் பிரித்தானியாவின் பங்களிப்பு மோசமான ஒரு வரலாற்றையே கொண்டது.

இந்த மோசமான வரலாற்றுப் பக்கங்களை அழிப்பதற்கு பிரித்தானியா முற்படுகிறதா என்ற சந்தேகம் பரவலாக எழுந்திருக்கிறது.

ஆனால், இத்தகைய ஆவணங்களை அழிப்பதன் மூலம் மாத்திரம், இந்தக் கறைகளில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும் என்று பிரித்தானியா நினைத்தால், அது அவர்களின் முட்டாள்தனம்.