துவிச்சக்கர வண்டிகளை வைத்திருப்போருக்கு முக்கிய செய்தி!

சாவகச்­சேரி நக­ர­சபை அலு­வ­ல­கத்­துக்கு துவிச்­சக்­க­ர­ வண்­டி­க­ளுக்­கு­ரிய 2018 ஆம் ஆண்­டுக்­கான இலக்­கத் தக­டு­கள் வந்­துள்­ளன.

துவிச்­சக்­கர வண்­டி­கள் வைத்­தி­ருப்­போர் இலக்­கத் தக­டு­களை சபை அலு­வ­ல­கத்­தில் பெற்று துவிச்சக்கரவண்டிகளில் பொருத்­து­மா­றும் கேட்­கப்­பட்­டுள்­ள­னர்.

எதிர்­வ­ரும் மாதங்­க­ளில் துவிச்சக்கரவண்டிகள் பரி­சோ­தனை பொலி­ஸா­ரால் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளன என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பரி­சோ­த­னை­யில் இலக்­கத் தகடு பொருத்­தப்­ப­டாத துவிச்சக்கர வண்டிகளின் உரி­மை­யா­ளர்­கள் மீது சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வுள்ள தென­வும் நக­ர­ச­பை­யி­னர் அறி­வித்­துள்­ள­னர்.