அதிகாலையில் மாட்டுடன் மோதி கோர விபத்து !

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின .அதில் மூவர் உயிரிழந்தனர். மாடு ஒன்றும் உயிரிழந்தது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மீன் கொள்வனவு செய்வதற்காக பயணித்த சிறிய ரக பாரவூர்தி ஒன்று பாதையின் குறுக்காக பயணித்த மாடு ஒன்றுடன் மோதி பின்னர், எதிரில் வந்த வான் மற்றும் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து ஏற்பட்டது.
சிலாபம் – குருநாகல் பிரதான வீதியின் முன்னேஸ்வரம் பகுதியில் இன்று அதிகாலை நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்தனர் என்று சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் விலத்தவ பகுதியை சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார். விபத்தில் காயமடைந்தவர்கள் தங்கொட்டுவை பகுதியை சேர்ந்தவர்கள். அவர்கள் சிலாபம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.