அஜித் பிறந்தநாள் பரிசாக ஆர்யாவின் புதுவரவு!

நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகி வெளிவர காத்திருக்கும் திரைப்படம் கஜினிகாந்த், இப்படத்தின் ட்ரைலரினை வரும் மே 1 அன்று வெளியிடுவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்!

ஹர ஹர மகாதேவகி படத்தை இயக்கிய சன்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகும் திரைப்படம் கஜினிகாந்த். ‘ஸ்டுடியோ கிரீன்’ ஞானவேல்ராஜா இப்படத்தினை தயாரிக்கிறார்.

இத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் ஆர்யா-வும், வனமகன் படத்தில் அறிமுகமான சாயிஷா சைகல் கதாநாயகியாக நடிக்கின்றனர். இவர்களுடன் ஆர்.ஜே.பாலாஜி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.

முன்னதாக இப்படத்தின் டீஸரினை கடந்த ஜனவரி மாதம் வெளியிட்ட படக்குழுவினர் தற்போது இப்படத்தின் ட்ரைலர் குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர்.

நடிகர் அஜித்தின் பிறந்தநாளான மே 1-ஆம் நாள் இப்படத்தின் ட்ரைலரினை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து நடிகர் ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தினில் பதிவிட்டுள்ளதாவது…