இப்படியும் ஒரு வேலை..!! இதற்கு சம்பளம் வேற..!!

நம்மில் பெரும்பாலானோர் எல்லோரையும் போன்று வழக்கமான வேலைகளைச் செய்து வருகிறோம்.ஆனால் ஒரு சிலர் இப்படிப்பட்ட வேலியிலிருந்து தப்பித்து அசாதாரண வேலைகளைச் செய்து வருகின்றனர்.அந்த வேலைகளைப் பற்றி நம்மில் பெரும்பாலானோர் கேள்விக்கூடப்பட்டிருக்க மாட்டோம். அப்படிப்பட்ட வித்தியாசமான வேலைகள் பற்றி இங்குப் பார்க்கலாம்.

வரிசையில் நிற்பவர்:நீங்கள் வரிசையில் நிற்பதை வெறுப்பவர்கள் என்றால், ஒரு தொழில்முறை வரிசையில் நிற்பவரை வாடகைக்கு எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்காக அவர் கட்டணம் பெற்றுக்கொண்டு வரிசையில் நிற்பார்.

புதிதாகத் தொடங்கப்பட்ட தயாரிப்பு அல்லது மாதிரி விற்பனை பொருளைப் பெற சில நேரங்களில் ஒரு வரிசையில் 19 மணிநேரம் நிற்க வேண்டிவரும். இது ஒரு கடினமான மற்றும் சலிப்பை ஏற்படுத்தும் வேலை. ஆனால் நன்றாகப் பணம் சம்பாதிக்க முடியும்.

நீர் சறுக்கி சோதனையாளர்:ஒரு நீர் சறுக்கி சோதனையாளரின் பொறுப்பானது, அதற்கு எவ்வளவு தண்ணீர் தேவைப்படும் என்பதைப் பார்க்க சறுக்கலில் பல பயணங்கள் மேற்கொள்வது, எவ்வளவு விரைவாகக் கீழே இறங்கலாம், எவ்வளவு பாதுகாப்பாகவும் வேடிக்கையாகவும் இருக்கிறது என்பதைச் சோதனை செய்வதாகும்.

கட்டிப்பிடி வைத்தியம்:நீங்கள் தனியாக இருந்தால், அரவணைப்பும் மற்றும் அணைத்துக்கொள்ள யாரேனும் தேவை என்றால் நீங்கள் தொடர்புகொள்ள வேண்டிய நபர் ஒரு தொழில்முறை அணைத்துக் கொள்பவர். வியக்கத்தக்க அளவில் பல நிறுவனங்கள் தற்போது மிகவும் சுவாரஸ்யமாகவும் ஓய்வெடுக்கக்கூடிய வகையில் தொழில்முறை அணைத்துக் கொள்ளும் அனுபவத்தை வழங்குகின்றன. யாரையேனும் கட்டிப் பிடித்து ஒரு மணி நேரத்திற்கு 60 டாலருக்கும் 80 டாலருக்கும் இடையில் பணம் சம்பாதிக்கலாம் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?

முகத்தை உணருபவர்:அவர்கள் தோல் பராமரிப்பு நிறுவனங்களில் வேலை செய்பவர்கள். புதிய தயாரிப்புகளை முயற்சி செய்யும் நபர்களின் மேம்பட்ட அளவைச் சரிபார்க்க முகங்களைப் பார்த்து உணருவார்கள். வித்தியாசத்தை உணர சில தீவிரத் திறமை உங்களுக்குத் தேவை. உங்கள் முகம் உணரும் அனுபவத்தின் அடிப்படையில் சில பெரிய தயாரிப்புகளை ஏற்றுக்கொள்வதோ,  நிராகரிப்பதோ ஒரு பெரிய பொறுப்பாகும்.

செல்லப்பிராணி உணவு சோதனையாளர்:யாருக்கும் கெட்ட உணவு பிடிப்பதில்லை. குறிப்பாகக் குடும்பத்தின் பிடித்த அங்கத்தினர்க்கு. இங்குதான் செல்லப்பிராணி உணவு சோதனையாளர்கள் வேலைத் தொடங்குகிறது. அவர்கள் செல்லப்பிராணியின் உணவைச் சோதனை செய்து சுவைகளை மதிப்பிடுவார்கள். மேலும் உணவு தரமாக உள்ளதா என்பதையும் உறுதிப்படுத்துவார்கள்.

அக்குள் முகர்பவர்:இந்த மக்கள் வாசனைத் திரவிய உற்பத்தியாளர்களிடம் வேலை செய்பவர்கள். அவர்களின் பணியானது தயாரிப்புத் தரத்தை உறுதிப்படுத்தி மேம்படுத்துதல். தரச் சோதனை எப்படி நடக்கும்? முகர்பவர்கள் தங்கள் நாட்களை ஒரு சூடான அறையில் அல்லது வெளிப்புறங்களில் செலவிடுகின்றனர். சில நேரங்களில் 60 அக்குள்களை 1 மணிநேரத்தில் முகர்ந்து பார்ப்பர். அவர்களுடைய நோக்கம் வாசனைத் திரவியம் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதைத் தீர்மானிப்பதாகும். அவர்கள் அறிக்கை அளிப்பதன் மூலம் உலகத்தைச் சிறந்த வாசனையுடன் இருக்க உதவுகிறார்கள்.

நிர்வாண மாதிரி:உங்களை மற்ற நபர்களுக்கு நிர்வாணமாக வெளிப்படுத்துவது சட்டவிரோதமானது அல்லது மிகவும் நெருக்கமான ஒன்றாக உள்ளது. ஆனால் இவர்களுக்கு அப்படி அல்ல. இந்த மாதிரிகள் கலைப் பெயரில் அனைத்தையும் பொறுத்துக்கொள்கின்றனர். நீங்கள் சிறந்த உடல் அமைப்பைப் பெறவில்லை என்றாலும், உங்களுக்கு நம்பிக்கை மற்றும் பல மணி நேரம் நிற்கும் திறன் வேண்டும்.

படுக்கை சோதனையாளர்:நீங்கள் வேலையில் தூங்குவதற்குச் சம்பளம் தரும் ஒரு வேலை. பலருக்கும் இது கனவுப் பணியாக இருந்தாலும் உண்மையில் அது கடினமான வேலையாகும். ஒரு நல்ல படுக்கை சோதனையாளர், மெத்தை எந்த முனைகளிலும் அமிழ்ந்து இல்லை என்பதையும், படுக்கையின் விளிம்புகள் உட்கார போதுமான வலுவானதாக இருப்பதைப் படுத்து சரிபார்க்க வேண்டும்.

பாம்பு விஷம் கறப்பவர்:பல நோக்கங்களுக்காகப் பாம்பு விஷம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் மிக முக்கியமானது மருத்துவ ஆராய்ச்சியில் அதன் பயன்பாடு ஆகும். மேலும் விஷமுறிவு உற்பத்தி செய்வதாகும். பாம்பு விஷம் கறப்பவர்கள் தங்கள் நாள் முழுவதும் பாம்புகளின் விஷம் உறிஞ்சுவதற்கு ஒரு பிளாஸ்டிக் பாத்திரத்தில் தள்ளிவிடுகிறார்கள். இந்த நாயகர்கள் விஷம் கறக்கும் விஷயங்களால் பல உயிர்களைக் காப்பாற்றுகிறார்கள்.

கோல்ஃப் பந்து சேகரிப்பாளர்:நீங்கள் ஒரு வெளிப்புற நபர் மற்றும் ஸ்கூபா டைவிங் உங்கள் காதல் என்றால், உங்களுக்கு இது சரியான வேலை ஆகும். கோல்ப் பந்து மூழ்காளரின் வேலை பல்வேறு குளங்களில் விழுந்த அனைத்துக் கோல்ஃப் பந்துகளைச் சேகரிக்கும் பொறுப்பு ஆகும். எளிதானது போன்று தோன்றினாலும் உண்மை என்னவென்றால், பல குளங்கள் நன்கு கவனித்துக்கொள்ளப்படவில்லை.

அநேகமாகப் பல குப்பைகள் மற்றும் பாசிகள் சேர்ந்து இருக்கும்.இவ்வாறான அழுக்குகள் நிறைந்த குளங்களில் இறங்கி பந்தை தேடி எடுத்துக் கொடுத்தல் வேண்டும்.. மேற்குறிப்பிட்ட வேலைகளுக்கு இப்பொது சர்வதேச அளவில் நிறைய கிராக்கி இருக்கின்றதாம்…

உங்களுக்கும் இப்படியொரு வேலை வேண்டுமானால் தாராளமாக முயன்று பாருங்கள்….  பார்ப்பதற்கும், கேட்பதற்கும் இலவானதாக இருந்தாலும் இந்த வேலைகளை செய்ய அதிக பொறுமை மிகவும் அவசியம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்…