வேனும் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலி : மூவர் படுகாயம்!!!

மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மாங்காடு பிரதேசத்தில் வேன் ஒன்றும் லொறி ஒன்றும் நேற்று நள்ளிரவில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானதோடு  மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கல்முனையில் இருந்து  மட்டக்களப்பு நோக்கிசென்ற வேனுடன் மட்டக்களப்பில் இருந்து கல்முனைக்கு கோழிகளை ஏற்றிச் சென்ற லொறி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

20180420_065050 வேனும் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலி : மூவர் படுகாயம்!!! வேனும் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலி : மூவர் படுகாயம்!!! 20180420 065050

இதில் ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனளிக்காத நிலையில்  உயிரிழந்துள்ளார்.

Untitled-1 வேனும் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலி : மூவர் படுகாயம்!!! வேனும் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலி : மூவர் படுகாயம்!!! Untitled 1ஒந்தாச்சிமடத்தைச் சேர்ந்த 21 வயதுடைய நிரோஸ்காந் என்ற இளைஞரே விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இவ் விபத்து  தொடர்பான மேலதிக  விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.