கிரிக்கெட் உலகில் புதிய அத்தியாயம்!

இங்கிலாந்து 100 பந்துகள் கொண்ட கிரிக்கெட் தொடரை அறிமுகப்படுத்தவுள்ளது.கிரிக்கெட் போட்டியில் 5 நாட்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் தொடராக மாற்றப்பட்டுள்ளது. இதனை தொர்ந்து 50 ஓவர்கள் கொண்ட போட்டியும் விறுவிறுப்பாக அமைவதற்காக 20 ஓவர்கள் கொண்ட இருபதுக்கு 20 தொடராக மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது இங்கிலாந்து 100 பந்துகள் கொண்ட கிரிக்கெட் தொடரை அறிமுகப்படுத்தவுள்ளது. இதை அறிமுகப்படுத்தும் நோக்கில் 2020 ஆம் ஆண்டு 8 அணிகள் பங்கேற்கும் போட்டியையும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தொடரில் முதல் 90 பந்துகள் 6 பந்துகளை கொண்ட ஓவர்களாவும், இறுதி ஓவர் மட்டும் 10 பந்துகளை கொண்ட ஓவராகவும் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.