மஹிந்தவிடம் மைத்திரி கோரிக்கை!

அரசாங்கத்தை விட்டு விலக வேண்டாம் என ஜனாதிபதி தமக்கு கூறியதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…

அரசாங்கத்தை விட்டு விலகக் கூடாது என ஜனாதிபதி பணித்திருந்தார்.

எனக்கு ஆட்சி செய்ய வேண்டும், நான் இந்த நாட்டை சரியான பாதையில் இட்டுச் செல்ல விரும்புகின்றேன் என ஜனாதிபதி கூறினார்.

எனவே எனக்கு நீங்கள் உதவுகள் என ஜனாதிபதி கோரியிருந்தார்.

ஜனாதிபதியின் நிலைப்பாட்டில் இருந்து கொண்டே நாம் இந்த பதவிகளில் இருக்கின்றோம் என மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.