சுன்னாகத்தில் கோர விபத்து!! குடும்பஸ்தர் பலி!!

யாழ். சுன்னாகத்தில் பட்டா ரக வாகனம் மோட்டார்ச் சைக்கிளை மோதித் தள்ளியதில் குடும்பஸ்தரொருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, சுன்னாகம் ஜெட்மோட்டர்ஸ் பகுதியில் நேற்று(15) இரவு-08 மணியளவில் சுன்னாகத்திலிருந்து மல்லாகம் நோக்கிச் சென்று கொண்டிருந்த பட்டா ரக வாகனம், சுன்னாகம் பகுதி நோக்கி வந்து கொண்டிருந்த மோட்டார்ச் சைக்கிளுடன் மோதியதில் குறித்த குடும்பஸ்தர் படுகாயமடைந்தார்.

படுகாயமடைந்த குடும்பஸ்தர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து அம்புலன்ஸ் மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

எனினும், சிகிச்சை பலனின்றிக் குறித்த குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த குடும்பஸ்தரின் உயிரிழப்புக்கு காரணமான பட்டா வாகனச் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.