கலாஓயாவில் வௌ்ளம் பெருக்கெடுப்பு! மன்னார் பாதை துண்டிப்பு

புத்தளம் அருகே கலாஓயாவில் ஏற்பட்டுள்ள வௌ்ளப் பெருக்கு காரணமாக மன்னாருக்கான பாதையில் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது.

புத்தளம் அருகே இலவங்குளம் பிரதேசத்தில் கலா ஓயாவை ஊடறுத்துச் செல்லும் புத்தளம் பாதையின் சப்பாத்துப் பாலம் வௌ்ளத்தினால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது.

குறித்த சப்பாத்துப் பாலத்தின் மேலாக இரண்டு அடிக்கும் அதிகமான உயரத்தில் வெள்ள நீர் பாய்ந்தோடுவதாக தெரிய வந்துள்ளது.

இதன் காரணமாக புத்தளம்-மன்னார் பாதை போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. எனினும் இந்த விவகாரம் தொடர்பாக ஊடகவியலாளர்கள் அறிவிக்கும் வரை அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிந்திருக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

கலாஓயாவின் வௌ்ளப் பெருக்கு காரணமாக மன்னார் செல்லும் அனைத்து வாகனங்களும் அநுராதபுரம் பாதையில் நொச்சியாகமை சென்று அங்கிருந்து ஓயாமடு வழியாக மன்னார் செல்ல நேரிட்டுள்ளது.