திருமணமாகி 2 மாதங்கள் : விபத்தில் இளைஞர் உயிரிழப்பு!!

வற்றாப்பளை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில், திருமணமாகி 2 மாதங்களே ஆன 20 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கேப்பாபுலவு சூரிபுரத்தைச் சேர்ந்த சண்முகலிங்கம் நிமலன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞர் நேற்று முன்தினம் (27) புதுக்குடியிருப்பு வற்றாப்பளை வீதியில் சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டையிழந்து விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று (28) உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.